சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கமலஹாசன், மக்கள் நீதி மய்யம் தொடங்கியதால் எனக்கு நஷ்டம் தான் என தெரிவித்தார். நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல, சோகத்தில் அரசியலுக்கு வந்தவன் என குறிப்பிட்ட அவர், என்னை அரசியலுக்கு வர வைப்பது கடினம் என்றார்கள், ஆனால் அரசியல் இருந்து போக வைப்பது கடினம் என்று தெரிவித்தார். கொள்கை கூட்டத்திற்கு இடையே தீப்பந்தம் ஏந்தி செல்ல விரும்பவில்லை என்று கமலஹாசன் கூறினார்.
கோவையில் 90 ஆயிரம் பேர் வாக்களிக்காததால் தான், நான் தோல்வியடைந்தேன் என்ற கமலஹாசன், கோவையில் கமல் தோற்கவில்லை, ஜனநாயகம் தோற்றது என்று கூறினார்.