உடனடியாக மதுக்கடைகளை மூட உத்தரவு: தமிழக அரசின் திடீர் ஆணை

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2018 (15:33 IST)
கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். 1000க் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 30 க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்