பொறியியல் பாடங்களை தமிழிலும் கற்கலாம்: இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

Webdunia
வியாழன், 27 மே 2021 (08:34 IST)
பொறியியல் உள்ள அனைத்து துறைகளின் பாடங்களும் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழிலும் பொறியியல் கல்லூரி படிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பல வருடங்களாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது அந்த வேண்டுகோள் செவிசாய்க்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வந்த தகவலின்படி வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் படங்களை தமிழ் மொழியில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. எனவே இனி தமிழிலும் பொறியியல் பாடங்கள் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழில் பொறியியல் கல்வி கற்பித்தால் தமிழகத்தை தாண்டி வேறு மாநிலங்களில் மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்