வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது - டிடிவி தினகரன் பேச்சு

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (17:15 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தேசிய கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் பலமாக ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக  ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என தினகரன் கூறியுள்ளார். 
அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரான தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று நிருபர்களூக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
 
ஏழை தொழிலாளார்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2000 கொடுக்கப்போவதாக அதிமுக அரசு அறிவித்துள்ளனர். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.
 
தற்போது விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.அவர்களுக்கு அமமுக கட்சி எப்போதும் ஆதரவு அளிக்கும். 
 
மேலு,ம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனனென்ன  திட்டங்களை எதிர்த்தாரோ அதற்கெல்லாம் இந்த அரசு ஆதரவளித்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டு பட்ஜெட்டில் சுமார் 300 கோடி தூர்வார ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார்கள். ஆனால் மேட்டூர் அணை நீர் கடலில் கலப்பதுதான் நடக்கிறது.
 
திமுக தலைவர் ஸ்டாலின் மீது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நம்பிக்கை இழந்து கொண்டே வருகிறார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்