ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!

Siva

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (18:38 IST)
ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
இந்த வழக்கில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த கூடுதல் மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது மத்திய அரசு அளிக்கும் பதிலை பொறுத்து, ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுமா என்பது குறித்த முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்