வெள்ளத்தை பார்வையிட்ட காங்கிரஸ் எம்பி.. சேறும் சகதியாக இருந்ததால் உள்ளூர் நபரின் முதுகில் ஏறி சென்ற கொடூரம்..!

Siva

திங்கள், 8 செப்டம்பர் 2025 (14:02 IST)
பீகார் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் எம்.பி. தா்பிக் அன்வர் ஆய்வு செய்தபோது, உள்ளூர்வாசிகள் ஒருவரின் தோளில் அமர்ந்து சென்ற காணொளி, சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
 
அந்த காணொளியில், வெள்ளம் சூழ்ந்த சேறு நிறைந்த சாலையில் உள்ளூர் மக்கள் நடந்து செல்லும்போது, எம்.பி. அன்வர் மட்டும் சேற்றில் கால் படாமல், ஒருவரின் தோளில் அமர்ந்து பயணம் செய்கிறார்.  
 
இந்த செயலுக்கு பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா  கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில், "காங்கிரஸின் அதிகார மனப்பான்மை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் அவர்களுக்கு வி.வி.ஐ.பி. அந்தஸ்து வேண்டுமா? காங்கிரஸ் எம்.பி. தா்பிக் அன்வர், மக்களை ஏளனம் செய்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மக்கள் தோளில் அமர்ந்து செல்கிறார். காங்கிரஸ் எம்.பி. வி.வி.ஐ.பி. மனப்பான்மையிலும், ராகுல் காந்தி விடுமுறை மனப்பான்மையிலும், ஆம் ஆத்மி கட்சி மறைந்தும் உள்ளனர். பிரதமர் மோடி மட்டுமே வேலை செய்கிறார்" என பதிவிட்டுள்ளார்.
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற சென்ற எம்.பி.யின் இந்த செயல், அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்