அதிமுக தலைமையின் எச்சரிக்கை ...

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (19:41 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் தினகரனின் உறவினருமான சசிகலா சில மாதங்களுக்கு முன் பெங்களூர் அஹ்ரகார சிறையிலிருந்து விடுதலை ஆனார்.

தேர்தலுக்கு முன் அவர் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில், சில நாட்களாகவே சசிகலா தன் ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இதுகுறித்த ஆடியோக்கள் வலம் வருகிறது. அதில், விரையில் அதிமுக கட்சியை வழிநடத்தப்போவதாக கூறியுள்ளார்.

சசிகலாவுடன் பேசியதாகவும், நேற்று பாமகவுக்கு எதிராக பேட்டி கொடுத்ததாகவும் கூறி அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தியை இன்று அக்கட்சித் தலைமை கட்சியை விட்டு நீக்கியுள்ளது.

இந்நிலையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் சசிகலா கட்சி என்ன செய்தாலும் அதிமுக ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் நாடகமாடி வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்