60 கோடி நிலத்தை முறைகேடாக விற்ற அதிமுக பிரமுகர்

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (09:31 IST)
60  கோடி மதிப்புள்ள நிலத்தை  முறைகேடாக விற்றதாக அதிமுக பிரமுகர் மீது காவல்நிலையத்தில் புகார்.


 
சென்னை ஆவடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோபால்,  60 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து, விற்றதாக  சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ரங்கபாஷ்யம் என்பர் புகார் அளித்துள்ளார்.

ரங்கபாஷ்யம், என்பவரின் 7 ஏக்கர் நிலம், ஜமீன் பல்லாவரத்தில் உள்ளது, இதனுடைய மதிப்பு 60 கோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் கோபால், அந்த நிலத்தின் ஆவணங்களை போலியாக தயார் செய்து, ரங்கபாஷ்யத்திற்கு தெரியாமல் விற்றுள்ளார். இந்த தகவல் ரங்கபாஷ்யத்திற்கு தெரிய வந்த உடன், கோபால் மீது, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ரங்கபாஷ்யம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்