தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த அதிமுக! – எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?

Prasanth Karthick
புதன், 20 மார்ச் 2024 (17:37 IST)
அதிமுக – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்த நிலையில் தற்போது கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.



மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகவேகமாக முடிக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. அதிமுக – தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நீண்டகாலமாக இழுபறியாக நீடித்து வந்தது.

5 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்பி சீட்டும் தேமுதிக தரப்பில் கோரப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து தாமதமாகி வந்தது. இந்நிலையில் கடைசியாக தற்போது 5 தொகுதிகளுக்கு மட்டும் தேமுதிக சம்மதம் தெரிவித்துள்ளது.

ALSO READ: யார் நல்லவங்க.. கெட்டவங்கன்னு மக்களுக்கு தெரியும்..! – ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சி திருவள்ளூர், மத்திய சென்னை, தஞ்சாவூர், விருதுநகர் மற்றும் கடலூரில் போட்டியிடுகின்றது. இதில் மத்திய சென்னை, தஞ்சாவூர் தொகுதிகளில் நேரடியாக திமுக வேட்பாளர்களையும், பிற தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களையும் தேமுதிக எதிர்கொள்ள உள்ளது. 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி தமிழகத்தில் வலிமையான வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. அதுபோன்ற ஒரு வலிமையான கூட்டணியாக இது அமையுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்