மந்திர சக்தி மூலம் பல பெண்களுடன் உல்லாசம் - மந்திரவாதி கார்த்திகேயன் திடுக் தகவல்

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (12:08 IST)
தன்னுடைய மந்திர சக்தி மூலம் பல பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்ததாக சென்னையில் கைது செய்யப்பட்ட மந்திரவாதி கார்த்திகேயன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெரம்பலூர் எம்.எம்.நகரில் இளம்பெண்ணின் சடலைத்தை வைத்து, மாந்திரீகம் செய்து வந்த கார்த்திகேயன் என்ற வாலிபர் சமீபத்தில் போலீசார் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில்,  20 மண்டை ஓடுகள், மனித எலும்புகள் மற்றும் ரத்தம் தோய்ந்த துணிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.  இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 
 
என்னுடை சக்தியை அதிகரிக்கவே இளம்பெண்ணின் சடலத்தை வைத்து பூஜை நடத்தினேன். அந்த பூஜை மட்டும் வெற்றி பெற்றிருந்தால், இந்த உலகை ஆட்டிப்படைக்கும் பெரும் சக்தியாக உருவெடுத்திருபேன். 
 
என் மந்திய சக்தி மூலம் பெண்களை வசியம் செய்து உல்லாசம் அனுபவித்து வந்தேன். அதற்காக, கடல் குதிரைகளை தினமும் உட்கொள்வேன். பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்னிடம் வந்து ஆசிபெற்றுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்