கரூர் அடுத்துள்ள ராமாக்கவுண்டனூர் பகுதியை சார்ந்தவர் யோக ராஜ வையாபுரி (வயது 85), இவருடைய மனைவி, அம்மையக்காள் (வயது 79), இவர்களுக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய பூர்வீக தொழிலான விவசாயம் பல ஏக்கர் பரப்பளவில் ஆரம்ப காலத்தில் இருந்து விவசாயம் பார்த்து வருகின்றனர்.
தற்போது விவசாய கூலித்தொழிலாளி ஆள் பற்றாக்குறை காரணமாக தற்போதுள்ள 10 ஏக்கர் விவசாய நிலத்தில், கிணற்றுப்பாசனத்தின் மூலம் 500 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீக்குச்சி மரங்கள், ரோஸ்வுட் மரங்கள், 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் கிடைக்க கூடிய முள் இல்லாத மூங்கில் மரங்களும், இதுதவிர அன்றாடம் வீற்றிற்கு தேவையான கத்திரிக்காய், வெண்டைக்காய், கீரை வகைகள், சுரைக்காய் ஆகியவைகளோடு மருத்துவக்குணங்கள் கொண்ட கற்றாழைகளும் பலவற்றை வளர்த்து வரும், இந்த தம்பதியினர், விவசாயத்திற்கு கூலி ஆட்கள் கிடைக்காத நிலையிலும், தனது விவசாயத்தினை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்றும் கருதி தாங்களே விவசாய கூலியாக செயல்பட்டு அனைத்து வித வேலைகளையும், அதாவது கண்மாய் வெட்டுதல், மம்முட்டி வேலை, தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், தேங்காய் பறித்தல் மட்டுமில்லாமல், டிராக்டரையும் ஒட்டி அசத்தி வருகின்றனர்.
79 வயதாகும், அம்மையக்காள் தனது வயதினையும் பாராமல், இன்றும் டிராக்டர் ஒட்டி அசத்தி வரும் அவர், இன்றும் தனது வேலையை ஒரு புனிதமாக தான் செய்து வருகின்றார். கடந்த 30 வருடங்களாக டிராக்டர் ஒட்டி வரும் அம்மையக்கா இன்றும் வயதாகி விட்டதே என்று பாராமல், இன்றும் விவசாயத்திற்காகவே, தனது வாழ்வினை அர்ப்பணித்த அம்மையக்காள் தன்னை போலவே, அனைவரும் வயது வரம்பின்றி விவசாயத்திற்காகவும், இயற்கைக்காகவும் வாழ வேண்டுமென்று அறிவுரை கூறி வருகின்றனர்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலம் மாறி தற்போது கப்பல் முதல் விமானம் வரை அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதித்து வரும் இன்றைய நிலையில், வயதாகியும் இன்றும் மூதாட்டி அம்மையக்காளின் விவசாய அர்ப்பணிப்பினை அனைவரும் பாராட்டி தான் ஆக வேண்டுமென்றும் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.