கரூர்: ஆனிலையப்பர் திருக்கோயிலின் அறுபத்து மூவர் திருவீதி உலா நிகழ்ச்சி

கரூர் அருள்தரும் அலங்காரவல்லி, அருள்தரும் செளந்தரநாயகி அம்மை உடன்மர் அருள்மிகு ஆனிலையப்பர் திருக்கோயிலின் அறுபத்து மூவர் திருவீதி உலா நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
தென்னிந்திய அளவில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் மிகவும் புகழ்பெற்ற சிவாலயம் என்கின்ற பெயர் பெற்ற கரூர் அருள்தரும் அலங்காரவல்லி, அருள்தரும் செளந்தரநாயகி அம்மை உடன்மர் ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா மற்றும் குருபூஜை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
 
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் விஷேசமாக அலங்கரிக்கப்பட்டிருந்த உற்சவர்கள் விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முருகன், அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ஆநிலையப்பர் மற்றும் செளந்தரநாயகி மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டு,  கரூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. 
 
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள் மேளதாளங்கள் வாசிக்க, சங்கு சப்தத்துடனும், இசை வாத்தியங்களுடனும் சுவாமி வீதி உலா வந்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சிவனடியார்களும் சுவாமிகளுடன் திருவீதி உலா வந்தனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்