கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயதான லட்சுமி அந்த பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன் லட்சுமியின் தந்தை விபத்தில் இறந்து விட்டார். இதனால் லட்சுமி, தாயின் அரைவணைப்பிலேயே வளர்ந்து வந்தார்.
இந்நிலையில் லட்சுமி தனது உறவினரான லோகனாதன் என்பவருடன் பழகி வந்துள்ளார். அவ்வாறு பழகி வந்தபோது, லட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, லோகனாதன் பலமுறை லட்சுமியை வன்புணர்வு செய்துள்ளார். இதனால் லட்சுமி கர்ப்பமாக்கியுள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த லட்சுமியின் தாயார், அவரக்குறிச்சி போலீஸில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில், லோகனாதனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். 15 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.