நடிகர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் தனது டுவிட்டரில் அரசியல் தொடர்பாக வெளியிட்ட கவிதை ஒன்றில் முடிவெடுத்தால் யாம் முதல்வர் என கூறியிருந்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் முதுகெலும்பில்லாத கோழை என கடுமையான வார்த்தைகளால் வசைபாடினார் எச்.ராஜா. இந்நிலையில் நடிகர் கமல் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தன்னை முதுகெலும்பில்லாத கோழை என விமர்சித்த எச்.ராஜாவுக்கு எலும்பு வல்லுனர் என்ற பட்டத்தை வழங்கினார்.
தனது அறிக்கையில் எலும்பு வல்லுனர் தம்பி எச்.ராஜா என அடைமொழி வைத்து வஞ்சபுகழ்ச்சி பாடினார் கமல். இது குறித்து கருத்து தெரிவித்த எச்.ராஜா அரசியலுக்கு வர கமல்ஹாசனுக்கு உரிமை உண்டு, முடிவெடுத்தால் முதல்வர் என்ற வரிக்குதான் எதிர்ப்பு என்று கூறினார்.
மேலும் பிரச்னை என்றால் ஓடிப்போய்விடும் முதுகெலும்பில்லாத கோழை கமல்ஹாசன் ஒரு இந்துவிரோதி என்பதால் எதிர்க்கிறேன், அவர் வக்கிரமாக பேசக் கூடியவர். ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை ஆதரிப்பவர். தலைவருக்கான தகுதியே இல்லாதவர் கமல்ஹாசன் என கடுமையாக மீண்டும் விமர்சித்துள்ளார் எச்.ராஜா.