தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டு வருகிறது என்பதும் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தக்காளி விலையை தொடர்ந்து துவரம் பருப்பு விலையும் இருமடங்கு உயர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ துவரம் பருப்பு 80 ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில் தற்போது 160 ரூபாயாக விற்பனையாகி வருவதாக தெரிகிறது.
துவரம் பருப்பு மட்டுமின்றி அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து வரத்து குறைவு காரணமாகத்தான் அரிசி பருப்பு ஆகியவை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகப்பெரிய திண்டாட்டத்தில் உள்ளனர்