குறையாத தக்காளி விலை.. ரேஷனில் விற்பனை செய்ய அமைச்சர் இன்று ஆலோசனை..!

திங்கள், 3 ஜூலை 2023 (07:08 IST)
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருவதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் தக்காளியை ரேஷன் கடையில் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இது குறித்து ஆலோசனை இன்று நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னையில் இன்று தக்காளி விலை பத்து ரூபாய் குறைந்துள்ளதாகவும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 130 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ரேஷனில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் இன்று அமைச்சர் பெரிய கருப்பன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்வது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ள நிலையில் உடனடியாக தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்