மெரீனாவை அடுத்து பெசண்ட் நகர் கடற்கரையிலும் போலீஸ் குவிப்பு

திங்கள், 2 ஏப்ரல் 2018 (08:32 IST)
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் சென்னை மெரீனாவில் போராட்டம் வெடிக்கும் வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது

இதனையடுத்து நேற்று முன் தினம் மெரீனாவில் போலீஸ் குவிக்கப்பட்டு கடற்கரை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இன்று காலை பேருந்துகள் உள்பட ஒருசில வாகனங்கள் அனுமதிக்கப்பட்டாலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் கடற்கரைக்கு செல்ல யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை

இந்த நிலையில் மெரீனாவை அடுத்து பெசண்ட் நகர் கடற்கரையும் நேற்றுமுதல் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேபோல் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் போராட்டக்காரர்கள் யாரும் மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் ரோந்து வாகனம், குதிரைகள் மூலமும் கண்காணித்து வருகின்றனர். இதற்கென உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்