ஏப்ரல் 2 வது வாரம் முதல் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 2,194 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8,79,463 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2,194 பேர்களில் 833 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12,670 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம், ஏப்ரல் 2 வது வாரம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியமர்த்தல் ஆகியவை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.