புதுவை அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் உறுப்பினர்!

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (07:57 IST)
புதுவை அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் உறுப்பினர்!
புதுவை அமைச்சரவையில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் அமைச்சர் ஒருவர் இன்று பதவி ஏற்க உள்ளார்
 
புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆன நிலையில் இன்று தான் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இன்று அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதுவையில் முதல் முதலாக 40 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் அமைச்சர் ஒருவர் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நெடுங்காடு என்ற தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சந்திர பிரியங்கா என்பவர் இன்று அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் 
 
40 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பெண் ஒருவர் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்