I.N.D.I.A கூட்டணியில் இணைகிறதா அதிமுக? ஒரே கூட்டணியில் திமுக-அதிமுக சாத்தியமா?

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (09:37 IST)
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ளதை எடுத்து I.N.D.I.A கூட்டணியில் அதிமுக இணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
I.N.D.I.A கூட்டணியில் ஏற்கனவே திமுக இருக்கும் நிலையில் அதிமுக இணைய வாய்ப்பு இருக்கிறதா? திமுக அதிமுக ஒரே கூட்டணியில் இணையும் சாத்தியம் நடைபெறுமா? என்று அரசியல் விமர்சகர்கள் ஆலோசித்து வருகின்றனர். 
 
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் வருமானவரித்துறை அமலாக்கத்துறை உள்ளிட்ட பிரச்சனைகள் அதிமுக தலைவர்களுக்கு ஏற்படும் என்றும் அப்போது தங்களுக்கு ஏதோ ஆதரவாக குரல் கொடுக்க தேசிய அளவில்  ஆதரவு தேவை என்றும் அதனால் I.N.D.I.A கூட்டணியில் அதிமுக இணைய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 
ஆனால் I.N.D.I.A கூட்டணியில் அதிமுக இணைந்தால் தமிழகத்தில்  திமுக அதிமுக தொகுதி உடன்பாடு ஏற்படுமா என்ற சிக்கலும் உள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்