இதுனால ஆபத்துதான்.. இல்ல ஆபத்தில்ல..! – குழப்பும் அதிமுக, குழம்பும் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (11:08 IST)
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விவசாய மசோதாக்களால் ஆபத்து இல்லை என முதல்வர் கூறிய நிலையில் அதிமுக எம்பி அதை எதிர்த்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக மசோதா, விலை உறுதிபாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டதிருத்த மசோதாக்கள் எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களைவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவை எதிர்த்து அகாலிதள அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று இந்த மசோதாக்கள் மாநிலங்களவை ஒப்புதலுக்கு வந்தது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் பேசியுள்ள நிலையில் அதிமுக எம்பி பாலசுப்பிரமணியனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வேளாண் மசோதாவால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் என கூறியுள்ள அவர், ஒப்பந்த அளவிலான விவசாய முறை உலக அளவில் தோல்வியடைந்த ஒன்று. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக விவசாய மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்பதால் அந்த மசோதாவை எதிர்க்கவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியிருந்த நிலையில், அதிமுக எம்பி ஒருவரே இது ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்