பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிராக வழக்கு போடுவோம்: அதிமுக அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (07:30 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச்சிலை வைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியபோது பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைக்கப்பட்டால் மெரினாவின் அடையாளமே மாறிவிடும் என்றும் மத்திய அரசு தனது முடிவை மறு பதிவு செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதிமுக வழக்கு தொடுக்கும் என்றும் கூறியுள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் திமுக அரசு கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்