நெய்வேலி என்எல்சி விவகாரம்.. தடையை மீறி உண்ணாவிரதம் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏ..!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (12:22 IST)
நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தை அதிமுக எம்எல்ஏ நடத்த இருந்த நிலையில் அந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் தடையை மீறிய அவர் விவசாயிகளுடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 விளைநிலத்தை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
 
அதிமுகவின் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் நாளை நடைபெற இருந்த இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தடையை மீறி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விவசாயிகள் மற்றும் அதிமுக எம்எல்ஏ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது  
 
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் தடையை மீறி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்