அதிமுக பொதுக்குழு வழக்கு.. இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு..!

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2023 (08:01 IST)
அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக பொது குழு கூடியது என்பதும் அந்த பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறை நீக்கப்பட்டு பொதுச்செயலாளர் என்ற பதவி கொண்டு வருவதாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும், இருதரப்பு வாதங்களும் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று சுப்ரீம் கோர்ட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட பொதுக்குழு முடிவுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா? அல்லது செல்லும் என்ற அறிவிக்கப்படுமா? என்பதை எதிர்பார்த்து அதிமுக தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்