இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கிவிட்டது! – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

திங்கள், 20 பிப்ரவரி 2023 (12:56 IST)
அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இரண்டாவது தர்ம யுத்தம் நடப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் எழுந்துள்ள நிலையில் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, எதிர்தரப்பான ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.

ஆனால் கட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடக்கவில்லை என்றும், தங்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “அதிமுகவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்க தொண்டர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படை விதியையே எம்.ஜி.ஆர்தான் வகுத்தார். ஆனால் கட்சியின் விதிகளை உடைத்து கட்சியை தன் இரும்பு பிடிக்குள் கொண்டு வர அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது.

2026ம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் உள்ளது. தேர்தல் ஆணைய ஆவணங்களில் அப்படியே உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவின் சட்டவிதிகளை காப்பாற்ற தற்போது தர்ம யுத்தம் தொடங்கியுள்ளது” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்