திமுக மாநாட்டுக்கு இடம் கொடுத்துள்ளாரா அதிமுக விவசாயி!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (15:19 IST)
திமுக வின் மாநாடு திருச்சி அருகே நடக்க உள்ள நிலையில் அந்த மாநாடு பகுதிக்கு தேவையான இடத்தை அதிமுக விவசாயி ஒருவர் கொடுத்துள்ளாராம்.

திருச்சியில் திமுக நடத்தும் பிரம்மாண்டமான மாநாடு பிப்ரவரி மாதம் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நடக்க உள்ளது. இதற்காக நிலங்களை உரிமையாளர்களிடம் இருந்து கேட்டுப்பெறும் பணிகளை திருச்சி மாவட்ட செயலாளர் கே என் நேருவின் ஆட்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்போது மாநாடு நடக்க உள்ள பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் நிலம் இருக்கவே அவரிடம் மாநாடு விஷயத்தை சொல்லி கேட்டுள்ளனர்.

அவரும் தன் நிலத்தில் போட்டுள்ள கொத்தமல்லிக்கு இழப்பீடாக பணம் பெற்றுக்கொண்டு நிலத்தைக் கொடுக்க சம்மதித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்