ரவுண்டு கட்டிய அதிமுக: கோட்டைவிட்ட திமுக!!

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (17:14 IST)
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் அதிமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது. 
 
தமிழக ஊராட்சி உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் முடிந்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
 
515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக 214 இடங்களையும் திமுக 244 இடங்களையும் கைப்பற்றின. அதோடு 5,090 ஊராட்சி ஓன்ரிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 1,781 இடங்களையும், திமுக 2,099 இடங்களியும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று மறைமுக தேர்தலில் தற்போதைய நிலவரப்படி அதிமுக 14மாவட்ட ஊராட்சிகளிலும் திமுக 12 மாவட்ட ஊராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோலதான் 150 இடங்களில் அதிமுகவும், 135 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்