ஆக்ஸிஜன் தொழிற்சாலையில் வெடி விபத்து ... 5 பேர் பலி ... பரபரப்பு சம்பவம் !

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (16:44 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பத்ரா தாலூகா என்ற பகுதியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எய்ம்ஸ் ஆக்ஸிஜன் பிரைவேட் என்ற தனியார் நிறுவனத்தில் இன்று 11 நண்பகல் மணி அளவில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
 
ஆனால், இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 15 பேர் காயம் அடைந்தனர். இவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
 
இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்