பாஜக கோரிக்கையை ஏற்று அதிமுக வேட்பாளர் வாபஸ்: அதிமுக தலைமை அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (20:46 IST)
கர்நாடக மாநில தேர்தலில் புலிகேசி நகர் என்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தி இருந்த நிலையில் பாஜக கோரிக்கையை ஏற்று அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் புலிகேசி நகர் என்ற தொகுதியில் அதிமுக அன்பரசன் என்ற வேட்பாளரை நிறுத்தியிருந்த  நிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்ததை எடுத்து அதிமுக தலைமையின் உத்தரவை அடுத்து அன்பரசன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்