முன்னாள் தமிழக சபாநாயகர் மூனுஆதியின் மகன் ஆதிமாறன் நிவாரண உதவி !

Webdunia
புதன், 6 மே 2020 (19:01 IST)
சென்னை தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றித் தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு முன்னாள் தமிழக சபாநாயகர் மூனு ஆதியின் மகன் ஆதிமாறன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு, மூன்றாம் கட்டமாக வரும் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் ஏழை எளிய மக்கள் தினகூலிவேலை செய்பவர்களாக உள்ள நிலையில் கையில் பணமின்றி உணவின்றி கஷ்படுகின்றனர்.

பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர். அந்த அகையில்,  சென்னை தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.
 

இங்கு,33 மற்றும் 34 வட்டத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட  மக்களுக்கு தினமும் அரிசி மூட்டைகள், ரொட்டி, முட்டை போன்ற உணவுப் பொருட்களை தனது சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவி வருகிறார்.

தமிழக சபாநாயகர் மூனுஆதியின் மகன் ஆதிமாறன் மக்களுக்கு செய்து வரும் நிவாரண உதவிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்