கமலை விமர்சித்த பாண்டேவுக்கு ஸ்ரீப்ரிய சரமாரி கேள்விகள்!

சனி, 11 ஏப்ரல் 2020 (09:10 IST)
சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் மெத்தனத்தை சுட்டிக்காட்டி கமல் கடிதம் எழுதிய நிலையில் அவரை பத்திரிக்கையாளர் பாண்டே விமர்சனம் செய்தார்.

பாண்டேவின் அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், அவரிடம் சில கேள்விகள் கேட்கும் விதமாகவும் நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஸ்ரீப்ரியா ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில்

’தமிழராக இல்லாதபோதும்‌, தெளிவான தமிழில்‌, தந்தி தமிழ்‌ தொலைக்காட்சியின்‌ நெறியாளராக… உங்கள்‌ மீது எனக்கு மரியாதை அதிகம்‌. இப்படி தான்‌ நானும்‌ இந்த கடிதத்தை துவங்கயிருக்க வேண்டும்… உண்மையில்‌ எப்போதும்‌ உங்கள்‌ மீது எனக்கு கோபம்‌ உண்டு… கேள்வி கேட்கும்‌ இடத்தில்‌ அமர்ந்திருப்பவர்‌ தான்‌ அறிவாளி, பதில்‌ சொல்லும்‌ இடத்தில்‌ அமர்ந்திருப்பவர்‌ அறிவற்றவன்‌ போல்‌, கேள்வியை கேட்டுவிட்டு பதில்‌ சொல்ல விடாமல்‌ தொடர்ந்து இடைமறிக்கும்‌ பண்பை புழக்கத்தில்‌ கொண்டூ வந்தவர்‌ நீங்கள்‌ என்பதால்‌! கேள்வி கேட்பவர்‌ புத்திசாலி என்றால்‌ பதில்‌ சொல்ல அமர்ந்திருப்பவரும்‌ புத்திசாலி என்று மதிப்பவன்‌ தான்‌ உண்மையான அறிவாளி! சரி…

நம்‌ பாரத பிரதமருக்கு எம்‌ தலைவர்‌ எழுதிய கடிதத்திற்கு உங்கள்‌ விமர்சனம்‌ பார்த்தேன்‌. நீங்கள்‌ பேசிக்கொண்டிருக்கும்‌ போது இடை மறிக்கவோ தடை விதிக்கவோ யாரும்‌ இல்லாதது உங்களுக்கு மிக செளகரியம்‌… சும்மாவே ஆடூபவருக்கு சலங்கை கட்டிவிட்டால்‌? ஜனக்‌ ஜனக்‌ பாயல்‌ பாஜே தான்‌… மூச்சு விடாமல்‌ பேசுகிறீர்கள்‌? பேட்‌ பண்ண ஆள்‌ இல்லாத போது பால்‌ போட்டூவிட்டு அவுட் என்று கத்துவது போல்‌ உள்ளது… உங்களுக்கு எப்போதுமே நீங்கள்‌ சொல்வது மட்டுமே உண்மை என்ற ஒரு மனப்பான்மை… உங்கள்‌ statistical கேள்விகளுக்கு பலர்‌ பதில்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌, பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்‌!எனக்கு உங்களிடம்‌ சில கேள்விகளே…
  1. சுனாமியைப்போல்‌ கொரோனாவும்‌ ஓர்‌ காலை திடீரென்று தான்‌ நம்‌ நாட்டிற்குள்‌ வந்ததா?
  2. பிரதமர்‌ அவர்கள்‌ தமிழில்‌ வந்த கடிதத்தை தான்‌ படித்தாரா? (வாழ்க தமிழ்‌!)
  3. நம்மவர்‌ எந்த குடிசை வீட்டில்‌ வாழ்ந்தார்‌ என்று கேட்டிருக்கின்றீர்கள்‌. குடிசையில்‌ வாழ்கின்றவர்களின்‌ மனதில்‌ வாழ்கின்றார்‌. அந்த எளிய மக்களுக்காக குரல்‌ கொடுப்பார்‌… நாட்டிற்கு முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டிருக்கின்றீர்கள்‌. அதற்கு விடை கிடைத்து விட்டால்‌ கொரோனாவிற்கு தீர்வு கிடைத்து விடூம்‌ போலும்‌…’அவர்‌ வீட்டில்‌ பால்கனி இல்லையா ?’என்பது
  4. அந்த மாதிரி பத்திரிக்கைகாரன்‌ நான்‌ இல்லை, இந்த மாதிரி பத்திரிக்கைகாரன்‌ நான்‌இல்லை என்று நீங்களே பெருமைப்பட்டூக்கொள்வது வேடிக்கை!இதற்கு பெயர்‌ தன்னடக்கமா?
  5. உங்கள்‌ கூற்றுப்படி உலக அதிசயத்தில்‌ ஒரு பத்திரிக்கையாளரான நீங்கள்‌ எப்படி கமா மற்றும்‌ முற்றுப்புள்ளி என்று எதுவும்‌ வைக்காது ஒரு பக்கமாக பேசினீர்கள்‌?அது பத்திரிக்கை தர்மமா?
  6. பக்கத்து நாட்டுக்காரன்‌ டிசம்பர்‌ மாதம்‌ 8ம்‌ தேதி முதல்‌ பலரை கொரோனா என்னும்‌ தொற்றில்‌ தொலைத்துக்கொண்டிருந்த தகவல்‌ நமக்கு தாமதமாகத்தான்‌ வந்ததா? சரி இந்த தொற்றிற்க்கு கோவிட்‌19 )
    என்ற பெயர்‌ ஏன்‌ வந்தது சொல்லுங்கள்‌ பார்ப்போம்‌?
உங்கள்‌ விமர்சனங்களுக்கு எனக்கும்‌ மூர்ச்சை அடக்கி பதில்‌ வசனம்‌ பேசத்தெரியும்‌… எப்போதும்‌ நீங்களே கேள்வி கேட்டதாக இருக்கக்கூடாது… அது மட்டூமின்றி எனக்கு கூலிக்கு மாரடிக்கத்தெரியாது… இனியாவது எதிரில்‌ மனிதரை அமர வைத்து, பின்‌ அவரை சாடுங்கள்‌!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்