நான் கூட பள்ளிக்குள் ஹிஜாப் அணிந்து சென்றதில்லை: குஷ்பு பேட்டி!

வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (10:54 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்க வேண்டும் என மாணவிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இது குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய பெண்களின் விருப்பம் என்றும் பள்ளியின் வாசல் வரை அணியலாம் என்றும் ஆனால் பள்ளிக்கூடத்திற்கு உள்ளே அணிந்து வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார் 
 
பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிவது தவறு என்றால் காவி துண்டு துண்டு அணிந்து வருவது தவறு தான் என்றும் பள்ளியில் மத அடையாளத்தை புகுத்த வேண்டாம் என்றும் நான் ஒருநாள் கூட பள்ளிக்கு சென்ற போது ஹிஜாப் அணிந்து சென்றதில்லை என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்