ஜெயலலிதா விவகாரம்: கண்ணீர் விட்டு அழுத நடிகை கௌதமி!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2016 (14:53 IST)
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் புகைப்படங்களை பார்த்த நடிகை கௌதமி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர் விட்டு அழுது பேச முடியாமல் இருந்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக போட்டியாளர்கள் நடனமாடினார்கள். அப்போது ஜெயலலிதாவின் வளர்ச்சி பாதைகள் குறித்து அவரது பல புகைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனை பார்த்த நடிகை கௌதமி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
 
ஜெயலலிதாவின் மரணம் குறித்த துக்கத்தால் பேச முடியாமல் அழுதுகொண்டே இருந்துள்ளார் நடிகை கௌதமி. முன்னதாக ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் அதனை பொதுக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கௌதமி இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்