தமிழக அரசை பாராட்டிய நடிகர் விஜயகாந்த் !

வியாழன், 3 நவம்பர் 2022 (17:25 IST)
சென்னையில்  தமிழக அரசின்  மழைக்கால துரித  நடவடிக்கைக்கு நடிகர் விஜயகாந்த் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையின் முதல் மழையே மிக அதிகம் பெய்துள்ளதாகவும், இப்பகுதியில் 300 மீட்டர் மழை என்பது மிக மிக அதிகம் நவம்பர் மாதம் வரை கிடைக்க வேண்டிய மொத்த பருவமழையில் 50% சென்னைக்கு இப்போதே பெற்று விட்டதாக தகவல் வெளியாகும் நிலையில், சென்னையில் மழை   நீர் தேங்கியதால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர்.

இந்த நிலையில், உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல தற்போது பெய்து வரும் மழையால் சென்னை மாநகர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.  சென்னை மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், மழை நீரை அகற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகானத் தன் டிவிட்டர் பக்கத்தில் நேற்று தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று, சென்னையில்  தமிழக அரசின்  மழைக்கால துரித  நடவடிக்கைக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

ALSO READ: தேசியக்கொடியை ஏற்றி வைத்த விஜய்காந்த்: தொண்டர்கள் கண்ணீர்!
 
இதுகுறித்து, அவர் பதிவிட்டுள்ளதாவது: ‘’எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை  மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய  முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும்  பாராட்டுகளை  தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்