கையில் கொடி ஏந்தியப் படி பாஜகவில் இணைந்த சர்ச்சை பிரபலம்!

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (12:01 IST)
நடிகர் ராதா ரவி, அதிமுகவில் இருந்து விலகி சென்னையில் இன்று பாஜகவில் இணைந்தார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன் கொலையுதிர்க்காலம் படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து தாகத முறையில் பேசியது சர்ச்சைக்குள்ளாகியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ராதாரவியின் அருவருப்பான அந்த பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. 
 
இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருமாறியதை அடுத்து திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ராதாரவி. அதன் பின்னர் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து தற்போது பாஜகவில் இனைந்துள்ளார். 
 
ஆம், நடிகர் ராதாரவி செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் சென்னையில் இன்று பாஜகவில் இணைந்தார். கையில் பாஜக கொடி ஏந்தியப் படி அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்ளும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்