பாரதமாதா பாரதிய ஜனதா கட்சியின் சொத்து அல்ல என்றும் இந்த நாட்டின் சொத்து என்றும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சனை இல்லை என்றும் இந்த விவகாரத்தை பிரதமருக்கு எதிராக திசை திருப்பவே எதிர்க்கட்சிகள் முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமரின் சாதனைகளை சொல்வதற்கு இரண்டரை மணி நேரம் பத்தாது என்றும் 20 மணி நேரம் வேண்டும் என்று கூறிய ஏசி சண்முகம் தமிழ்நாட்டில் பாரத மாதாவின் சிலையை வைக்க தடுக்கின்ற முயற்சிகள் இருக்கும் போது தான் பிரதமர் தன்னுடைய கண்டனத்தை சொல்லி இருக்கிறார் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டிலிருந்து வரும் பேச்சுக்கள் பிரிவினையாக மாறிவிடுமா என்ற அச்சத்தில் பிரதமர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் இந்தி உள்பட பிற மொழிகளை கற்றுக் கொள்வது தவறல்ல அது நமது வேலைவாய்ப்புகளுக்கு பெரிதும் உதவும் என்றும் கூறினார்.