யார் இந்த ராஜூமுருகன்?

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (09:23 IST)
திருவாரூரைச் சேர்ந்த ராஜூ முருகன், முதல் விகடன் நிறுவனத்தில் பத்திரிகையாளராக இருந்தவர்.


 


அதே விகடனில் வட்டியும் முதலும் என்ற தொடர் மூலம் பிரபலமடைந்தார். பின்னர் இயக்குனர் லிங்குசாமியிடம்  உதவி இயக்குனராக பணியாற்றினார். பின், தன் முதல் படமான குக்கூவை எடுத்து, தமிழ் சினிமா ரசிகர் இடத்தில் நீங்கா இடம் பிடித்தார். அண்மையில், தனது இரண்டாவது காவியமான ஜோக்கர் திரைப்படத்தை எடுத்து, தமிழ் சினிமாவில் புரட்சியை செய்தவர்.

மேலும், பல பொன்னான திரைப்படத்தை எடுத்து வரலாற்றில் இடம் பிடிக்க இருக்கும் ராஜூமுருகன், விவாகரத்தான டிவி தொகுப்பாளினியை நேற்று திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்