சென்னை அபிராமி மெஹா மால் அறிவிப்பால் புது சர்ச்சை

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (09:40 IST)
சென்னை அபிராமி மெகாமாலை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதாக அறிவிப்பு வெளியாக உள்ளது. இதில் புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளில் சைவ உணவு உண்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.

சென்னையில் இயங்கும் வணிக வளாகங்களில் முக்கியமானது அபிராமி மெகாமால். இதன தரைத் தளத்தில் வணிக வளாகங்களும் மேல் தளத்தில் திரையரங்கங்களும் இயங்கி வருகின்றன. இதனைப் புதுப்பிக்க விரும்பியுள்ள அதன் உரிமையாளரான அபிராமி ராமநாதன் ஒரு அறிக்கை ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.

அதில் ’தற்போதைய டிஜிட்டல் சினிமாவிற்கு 1000 இருக்கைகள் கொண்ட திரையரங்குகள் பொருந்தாது. எனவே இந்த வணிக வளாகம் மற்றும் திரையரங்குகள் இயக்கத்தை பிப்ரவரி 1 முதல் நிறுத்தி விட்டு அடுத்த 2 ஆண்டுகளுக்கு கட்டிடத்தைப் புதிதாகக் கட்டும் பணிகள ஆரம்பிக்க இருக்கின்றன. மேலும் புதிதாகக் கட்டப்படவுள்ள கட்டிடத்தில் 3 மாடிகள் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளை அமைத்துவிட்டு மீதியுள்ள 14 மாடிகளில் குடியிருப்புகள் அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளை வாங்க இருப்போரில் சைவ உணவு உண்போர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என அறிவித்தார்.

இதனையடுத்து இப்போது இந்த சர்ச்சையான கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக பலரும் அபிராமி ராமநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குடியிருப்பில் சைவ உணவு உண்பவர்களுக்கே முன்னுரிமை என அறிவித்த நிலையில் உங்கள் தியேட்டர்களுக்கும் சைவ ஊனவு உண்பவர்களையே அனுமதித்துக் கொள்ளுங்கள் எனக் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்