ஆவினில் 4.5% கொழுப்பு சத்துள்ள கிரீன் மேஜிக் பால் முற்றிலும் நிறுத்தமா? அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (17:33 IST)
வேலூர் ஆவினில்  பொதுமக்களின் ஆதரவை பெற்ற 4.5% கொழுப்பு சத்துள்ள கிரீன் மேஜிக் பால் முற்றிலும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
 
ஆவின் நிறுவனத்தை பொருத்தவரை  பொதுமக்களின் பெரும் ஆதரவை பெற்றது என்றால் அது பச்சை நிற கிரீன் மேஜிக் பால் மட்டுமே.   கொழுப்புச்சத்து 4.5%, இதர சத்துக்கள் 8.5% கொண்டதாக இந்த பால் விலையும் மலிவு.
 
 
இந்த க்ரீன் மேஜிக் பால் திடீரென நிறுத்தப்பட்டு ஊதா நிற டிலைட் பால் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளதால் வேலூர் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பச்சை நிற பால் பாக்கெட்டுகளைவிட டிலைட் பாலின் சுவையும், தரமும் குறைவு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
கிரீன் மேஜிக்கில் உள்ள சத்துக்களைக் காட்டிலும் டிலைட் பாலின் சத்துக்கள் குறைவாக உள்ளதால் பொதுமக்கள் இதனை வாங்குவதில்லை. டீக்கடைக்காரர்கள் மட்டுமே வாங்குவதாக கூறப்பட்டது.
 
ஆவின் பால் விலையை குறைத்ததாக கூறிய தமிழக அரசு, அதன் தரத்தை இப்போது குறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளதால் இதுகுறித்து ஆவின் நிர்வாகம் விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்