கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை.. பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (17:10 IST)
கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனையை மேற்கொள்ள ஆவின் நிறுவனத்திற்கு  உத்தரவிடக்கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது.
 
இந்த மனுவின் மீதான விசாரணையில் தமிழக சுற்றுச்சூழல் துறை, ஆவின் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று வழி என்ன?, மறுசுழற்சி செய்வதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன? உள்ளிட்டவை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனையை மேற்கொள்ள ஆவின் நிறுவனத்திற்கு  உத்தரவிடக்கோரி கடந்த சில நாட்களுக்கு மனுதாக்கல் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்