ஆவின் பால் விலை மீண்டும் உயருகிறதா? அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

புதன், 27 செப்டம்பர் 2023 (07:55 IST)
தமிழகத்தில் ஆவின் பால் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்ந்தது என்பதும் இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
அது மட்டும் இன்றி ஆவின் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் விலையும் உயர்ந்தது. குறிப்பாக வெண்ணெய், நெய் ஆகிய பொருள்களின் விலை உயர்ந்ததை அடுத்து மக்கள் அதிருப்தி அடைந்தனர். 
 
இந்த நிலையில் ஆவின் பால் விலை உயர வாய்ப்பில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார். மேலும் தனியார் நிறுவனங்களின் பால் விலையை ஒப்பிடும்போது ஆவின் பால் விலை குறைவு என்றும் அமைசச்ர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
 
மேலும் பால் விலையை உயர்த்துவதற்கான எந்த முயற்சிகளிலும் அரசு ஈடுபடவில்லை என  மனோ தங்கராஜ் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்