இந்தியா கூட்டணியின் பொதுக்குழு கூட்டம் ரத்து

சனி, 16 செப்டம்பர் 2023 (15:06 IST)
வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதன்படி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள   16 கட்சிகள் இக்கூட்டணியில்  இணைந்துள்ளன.

இந்த நிலையில், பாட்னா, பெங்களூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சமீபத்தில் மும்பையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில்,  மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியில் பொதுக்கூட்டம் ரத்து செயப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத், ’’அக்டோபர் 2 ஆம் தேதி போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
 
இந்தியா கூட்டணியின்
 பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் அறிவிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்