டெல்லியில், 60 வயது முதியவரை தாக்கிய வழக்கில், ஆம் ஆத்மி எம்எல்ஏ தினேஷ் மோகானியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி துக்ளகாபாத் பகுதியில் 60 வயது முதியவரை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ தினேஷ் மோகானியா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ஜாமினில் வெளிவர முடியாத வகையில் சட்டப் பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஒரு வழக்கை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.