கழுத வயசாகியும் அது நடக்கலையே: ஏக்கத்தில் வாத்தியார் தற்கொலை

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (11:39 IST)
திருமணமாகாத ஏக்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கருப்பையா(30). இவர் திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 30 வயதாகியும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்தார் கருப்பையா.
 
இந்நிலையில் கருப்பையா சுவாமி தரிசனம் செய்ய திருநள்ளாருக்கு சென்றுவிட்டு ரயிலில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். மிகுந்த மனவேதனையில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
 
தகவலில்பேரில் வந்த காவல் துறையினர், கருப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் திருமணமாகாத ஏக்கத்தில் தான் தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்