வாய்க்கால்களில் செத்து மிதந்த லட்சக்கணக்கான மீன்களால் பரபரப்பு

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (23:14 IST)
தமிழக அளவில் மட்டுமில்லாமல், உலக அளவில் தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஆங்காங்கே விழிப்புணர்வு ஏற்படுத்தி தண்ணீரின் நன்மைகள் குறித்தும் ஆங்காங்கே விழிப்புணர்வு நடைபெற்று வரும் நிலையில், உலக தண்ணீர் தினம் நாளில் வாய்க்கால்களில் லட்சக்கணக்கான மீன்கள் பல டன் கணக்கில் செத்து மிதந்த காட்சிகள் தமிழக அளவில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், இலாலாபேட்டை பகுதியில் காவிரி கரையோரத்தில் பாயும் தென்கரை மருதாண்டான் வாய்க்காலில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததோடு, அதனை சுத்தப்படுத்தாமல் அப்படியே நீர்நிலைகளும் மாசடைந்ததோடு துர்நாற்றமும் வீசி வரும் அவலநிலை உலக தண்ணீர் தினத்தன்று அரங்கேறிய சம்பவம் பெரும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இலாலாபேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பாலத்தில் ஷெட்டர் அப்படியே அடைக்கப்பட்டிருப்பதால் மீதமுள்ள நீர்நிலைகள் அசுத்தம் ஆகாமல், சிந்தலவாடி, விட்டுக்கட்டி ஆகிய பகுதிகளின் வழியாக பாயும் நீர்கள் முற்றிலும் மாசடைந்துள்ளது. கெண்டை மீன்கள் எனப்படும் ஒரு வித மீன்கள் மட்டுமே லட்சக்கனக்கான அளவில் பல டன் கணக்கில் இறந்து நீரில் மிதந்து கிடக்கும் இந்த சூழலுக்கு இன்றும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தினால் இப்பகுதி வழியாக பயணம் செய்யும் கரூர் டூ திருச்சி மற்றும் திருச்சி டூ கரூர் ஆகிய வழியாக பயணிக்கும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகளும், மக்களும் மூக்கை பிடித்த வண்ணம் சென்று வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், அருகிலேயே நெல், வாழை, வெற்றிலை ஆகிய விவசாயங்கள் செய்து வரும் நிலையில் இந்த நீரை பயன்படுத்தி பாசனத்திற்கு விட்டால் அந்த விவசாயமும் பாழ்படும் ஆகையால், பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களின் ஒரு மித்த கருத்தாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்