அதிகாலையில் சென்னையில் மழை: கோடை வெப்பத்தில் இருந்து தப்பித்த பொதுமக்கள்

வியாழன், 11 ஜூன் 2020 (07:54 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கோடையின் வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது சற்று கோடையில் வெப்பம் குறைந்து ஒரு சில இடங்களில் மழை பெய்ய ஆரம்பித்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
குறிப்பாக சென்னையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிகவும் உச்சத்தில் இருந்தது. 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்ததால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெரும் சிரமத்தில் இருந்தனர்
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதாவது அக்னி நட்சத்திரம் முடிந்ததிலிருந்து கோடை வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அவ்வப்போது மழையும் பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருவதால் கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தப்பிக்க குளிர்ச்சியான தட்ப வெட்ப நிலையை அனுபவித்து வருகின்றனர் 
 
சென்னையில் தரமணி, மயிலாப்பூர், சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரபரப்பில் இருக்கும் பொதுமக்களுக்கு இந்த மழை ஒரு ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்