இந்த நிலையில் ஆண்டிபட்டியில் அமமுகவினர் 150 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சோதனைக்கு வந்த அதிகாரிகளை தடுத்ததாக ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்த அதிகாரிகளும் போலீசார்களும் வந்ததாகவும், சோதனைக்கு வந்த போலீசை தடுத்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.