சரக்கு என நினைத்து ஆசிட்டை குடித்த நபர்

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (08:43 IST)
புதுவையில் நபர் ஒருவர் சரக்கு என நினைத்து துணி வெளுக்கும் ஆசிட்டை குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
புதுவை கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். தமிழரசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் மலையில் வீட்டிற்கு வரும்போது மது பாட்டிலோடு தான் வருவார்.
 
இந்நிலையில் நேற்றும் மதுபாட்டிலோடு வீட்டிற்கு வந்த அவர், மதுபாட்டிலை துணி வெளுக்கும் ஆசிட் பாட்டிலிற்கு பக்கத்தில் வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
 
வெளியே வந்த அவர் மது பாட்டிலிற்கு பதிலாக அந்த ஆசிட் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். சற்று நேரத்தில் மயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்