இந்நிலையில் அருள்பிரகாஷை அழைத்த ஹோட்டல் உரிமையாளர், ஹோட்டலில் போதிய அளவு வருமானம் இல்லாததால் கடையை மூடப்போவதாகவும், வேறு வேலை பார்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அருள்பிரகாஷ் நடுரோட்டில் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருள்பிரகாஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.