’சோகம்’ - எஸ்ஆர்எம் பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவி பலி!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2016 (05:45 IST)
சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் என்ற மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

 
 
இப்பள்ளி வளாகத்தின் 2-வது மாடியில் தொடக்க கல்வி வகுப்புகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இங்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லோக மித்ரா, நேற்று பிற்பகல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். 
 
இதை அடுத்து, படுகாயம் அடைந்த மாணவி லோக மித்ரா, அருகே உள்ள SRM மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மாணவி லோக மித்ராவை பார்க்க அவரது தந்தை இளங்கோவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மாணவி சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்,
 
இந்நிலையில், மாணவி லோக மித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். யாருமில்லாத மாடிக்கு மாணவி ஏன் சென்றார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், எஸ்ஆர்எம் நைட்டிங்கேல் பள்ளியில் மாணவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்று புகார் கூறியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்